கேளிக்கை

ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய எமி ஜாக்சன்!!!

(UDHAYAM, COLOMBO) – நடிகை எமி ஜாக்சன் ரஜினி நடித்து வரும் படத்திற்கு குட்-பை சொல்லியிருக்கிறார்.

ரஜினி நடித்துவரும் ஓ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.

ஓ’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.300 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்பிறகு ரூ.450 கோடி வரை பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை முடித்தபிறகு ரஜினி அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டார் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் “தர்பார்”

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்

இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் ஹன்சிகா…