கொழும்பு மாவட்ட நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து, யூடியூபர் சுதத்த திலக்சிரிக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இன்று (30) கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சதுன் விதானகே, முதலாம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்து இந்த உத்தரவை வழங்கினார்.
மனுஷ நாணயக்காரவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் கீழ் ஆஜராகினார்.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு, திலக்சிரி மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவதூறு கருத்துகளை வெளியிடுவதையோ அல்லது அவதூறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ தடை செய்கிறது.
இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.