விளையாட்டு

யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறுகிறார் ரொனால்டோ

(UTV | கொழும்பு) –  போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைவர் 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக 2018-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார்.

இந்த நிலையில் அவர் இந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறார். யுவென்டஸ் அணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்று அவர் தன்னிடம் கூறியதாகவும், அதனால் அவர் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் அந்த அணியின் பயிற்சியாளர் மாசிம்லியனா அலெக்ரி நேற்று தெரிவித்தார்.

ரொனால்டோ அடுத்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்காக விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அவரை தங்கள் அணிக்கு மாற்றுவதற்கு, யுவென்டன்ஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக மான்செஸ்டர் யுனைடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மான்செஸ்டர் சிட்டி கிளப் அவரை இழுக்க முயற்சித்து பின்வாங்கியதுகுறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மற்றும் இங்கிலாந்து -2ம் நாள் ஆட்டம் இன்று

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்

பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான வீர, வீராங்கனைகள் தெரிவு