அரசியல்உள்நாடு

யாழ் மாநகர சபை மேயர் தொடர்பில் வௌியான அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரும் யாழ் மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரி மற்றும் கட்டணங்களைத் தவிர அரசுக்கு வருமான ஆதாரம் எதுவும் இல்லை

Dilshad

CIDயில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய சுஜீவ சேனசிங்க எம்.பி

editor

தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு இன்றும் சந்தர்ப்பம்