அரசியல்உள்நாடு

யாழ். மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா

யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி ஞாயிற்றுக்கிழமை (31) வெளியிடப்பட்டது.

குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

Related posts

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில்..

அச்சுறுத்தல்களால் ரணிலின் வெற்றியை தடுக்க முடியாது – ஆஷு மாரசிங்க

editor

மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்தார் ஆசாத் மௌலானா!