உள்நாடு

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்தனர்.

அமைச்சர் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.

அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளையும் பாரையிட்டதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

அத்தோடு குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தார்.

அமைச்சரின் இந்த விஜயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் மகிபால மற்றும் டொக்டர். அசேல குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி  வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் விஷேட அறிவித்தல்

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு