வணிகம்

யாழ். தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

(UTV | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று 1,500 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, கடந்த ஆம் திகதி அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது.

எனினும் இறக்குமதி மீதான வரி நீக்கத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் இன்று 22 கரட் தங்கத்தின் விலை 91,700 ரூபாவாக குறைவடைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 93,050 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சம் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மர முந்திரிகை அறுவடையில் வீழ்ச்சி

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

விவசாய வலயங்களில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி களஞ்சியசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை