உள்நாடு

யாழ் செம்மணி வளைவுக்கு அண்மையில் கோர விபத்து!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் செம்மணி வளைவுக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்ததோடு, மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும் பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் புவனேஸ்வரன் மனோஜ் என்பவர் கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் ஆவார். மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு

உலக தர வரிசையில் இலங்கையின் இந்த பல்கலைக்கழகம் முதலிடம் | University Ranking Sri Lanka 2023

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு