வணிகம்

யாழ்ப்பாணம், வவுனியா அடங்னளாக 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்கான வறுமையை ஒழிக்கும் நிலையான அபிவிருத்தி இலக்கை அடையும் நோக்கில். நாடு பூராகவும் 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், வவுனியா போன்ற மாவட்டங்களிலும் இhற்கான  முன்மாதிரிக் கிராமங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இதற்கென இந்த வருடத்தில் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி வங்கியின் நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் கே.கே.எல். சந்திரதிலக்க தெரிவித்தார்.

இதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளன. அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பிரதேச ரீதியில் தனிமைப்பட்டுள்ள உற்பத்தித்துறையை படிப்படியாக தேசிய உற்பத்தி செயற்பாடுகளுக்கு உள்வாங்கிக் கொள்வது இதன் மற்றுமொரு நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

Related posts

நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கையிடம் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்

உலர்ந்த பழங்கள் இறக்குமதி செய்வத்தில அரசு அவதானம்