உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கோர விபத்து – பெண் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்திசையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.

இதனை அடுத்து தாயும், மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதன்போது எதிர்திசையில் பயணித்த டிரக்டர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் – இருவர் கைது.

வயலில் வீழ்ந்த யானை உயிருடன் மீட்பு – சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை

editor

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்

editor