யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை மாணவர் சங்கம் தனது 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 நவம்பர் 5 ஆம் திகதி யாழ்ப்பாண சாட்டி கடற்கரையில் சிறப்பு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை ஏற்பாடு செய்தது.
இத்திட்டத்தில் சட்டத் துறையின் நான்கு ஆண்டுகளின் மாணவர்கள் பங்கேற்று ஒற்றுமையையும் சுற்றுச்சூழல் பொறுப்பையும் வெளிப்படுத்தினர்.
குறித்த திட்டத்தில் சட்ட மாணவர் சங்கத் தலைவர் எம். என். எம். முஸ்தாக் நஃப் மற்றும் செயலாளர் சஹன் சத்சரா ஆகியோரின் தலைமையில், துறைத் தலைவர் திருமதி கோசலை மதன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.
இத்திட்டத்திற்கான பொறுப்பாளர்களாக திருமதி சுஜாதா சம்ரதிவகரா மற்றும் திருமதி சுபாஷினி ருமணன் ஆகியோர் பணியாற்றினர்.
இந்நிகழ்வு கடலோரச் சூழலின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் சமூக பொறுப்புணர்வை மேம்படுத்தும் சட்ட மாணவர்களின் பங்களிப்பையும் வலியுறுத்தியது.
