உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் , 30 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 18 , 22 மற்றும் 23 வயதான நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

மைத்திரிக்கும் ரணிலுக்கும் மீளவும் அழைப்பு

புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

பயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றி கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்