உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று அதிகாலை (27) 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

இன்று முதல் நாடு முழுவதும் QR முறை நடைமுறைக்கு

ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே அவசர சந்திப்பு

editor

Scan Jumbo Bonanza 2023 : விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்