அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி (NPP) யாழ்ப்பாணத்தில் இன்று (10) தாக்கல் செய்தது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் வேட்பு மனுவை இன்று காலை கையளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராக க. இளங்குமரன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பிரதீபன்

Related posts

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர

editor

மற்றொரு முன்னாள் பிரதியமைச்சர் மீது வழக்கு!

editor

அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்

editor