யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (20) விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மதில் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-பிரதீபன்