உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ரயிலில் சிக்கி யுவதியின் கால் துண்டான துயரம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார்.

இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த யுவதி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-கஜிந்தன்

Related posts

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

இரும்புத் தாது விலைகளும் அதிகரிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அவசர அறிவிப்பு

editor