உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – இருவர் படுகாயம்

பலாலி வீதி புன்னாலைக்கட்டு பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த போது, இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதியது.

இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு முதியவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்.

ஹிஸ்புல்லா உட்பட மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் [UPDATE]

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்கள் விற்பனை அமோகம்

editor