வகைப்படுத்தப்படாத

யாழில் மர்ம கும்பலால் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்துடன் உந்துருளிகளில் வந்த சிலர், நபரொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மானிப்பாய் – ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட தரப்பினர் 4 உந்துருளிகளில் வந்துள்ள நிலையில், மூன்று பேர், குறித்த நபர் மீது தாக்குதலை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாண காவற்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மானிப்பாய் –  இனுவில் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபபொருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த அவர், தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

உந்துருளிகளில் வந்தவர்கள், முகத்தை கருப்பு துணியால் மூடி இருந்ததாகவும், வாகன இலக்க தகடுகள் அகற்றப்பட்டு இருந்ததாகவும், காயமடைந்த நபர் காவற்துறையிடம் கூறியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட குழுவை தேடி, காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

Related posts

Malinga seals Sri Lanka win in his Final ODI

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் இடைநீக்கம்

දිස්ත්‍රික්ක කිහිපයකට නිකුත්කළ නායයෑම් අනතුරු ඇඟවීම තවදුරටත්