உள்நாடு

யால சம்பவம் : பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) –  யால பூங்காவில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசியல் செல்வாக்கின்றி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் மேலதிக விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க வன வள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி சந்திர ஹேரத் தீர்மானித்துள்ளார்.

யால பூங்கா தொடர்பில் பணியாற்றிய அதிகாரிகள் கடமை தவறியமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிய குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்க அவர்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

Related posts

காணாமல் போன ஊடகவியலாளரின் உடல் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.!

‘பசுமை ஆசான்’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் – ருஹுனு பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

editor