உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் இளம் தாய் பலி – உயிர் தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (04) இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் மகிழவெட்டுவானைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பசுபதி (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.

இதனையடுத்து, பொலிஸார் உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன், உயிரிழந்த தாயின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

-சரவணன்

Related posts

இலங்கை மென்மேலும் முன்னேற்றமும் செழிப்பும் அடைய சவூதி தூதுவர் வாழ்த்து

editor

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை

மஹிந்தவிடம் CID வாக்குமூலம்