உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் 53 வயதுடைய தாயும், 28 வயதுடைய மகனும் பலி

குருநாகல் – மஹாவ பகுதியில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை (19) இச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் அப் பகுதி மக்கள் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் மகள் ஏற்கனவே
இறந்துவிட்டதாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.

அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியான இனோகா குமாரி
செயற்பட்டுள்ளார்.

காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

வீடியோ | தெஹிவளை பாதியா மாவத்தை பள்ளிவாசலுக்கு எதிரான வழக்கு வாபஸ்

editor

பிள்ளையானின் அலுவலகத்தில் இரண்டு தற்கொலை குண்டுகள்

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான, யூ.எல். 1205 என்ற விமானம் பாகிஸ்தானுக்கு