உள்நாடுபிராந்தியம்

யானை தந்தங்களுடன் நால்வர் கைது!

அநுராதபுரத்தில் கெக்கிராவை பிரதேசத்தில் 2 யானை தந்தங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்கிரியாகம வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 அடி உயரமுடைய யானை தந்தங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 22, 50, 41 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர்.

கலாவெவ குளத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்த காட்டு யானையின் எச்சங்களில் இருந்து இந்த யானை தந்தங்களை எடுத்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

SLFP சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

ரிஷாட் கைதிற்கு அரசியல் நோக்கமே காரணம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையர்களுக்கு புதிய பிறப்பு சான்றிதழ்