உள்நாடுவணிகம்

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!

எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பை இலங்கையுடன் ஒருங்கிணைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)தெரிவித்துள்ளார்.

தனது அண்மைய இந்தோனேசியா விஜயத்தின் போது, ​​இலங்கையுடன் உலகளாவிய ஸ்டார்லிங்க் வலையமைப்பை ஒருங்கிணைத்தல் தொடர்பாக மஸ்க் உடன், தாம் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொழும்பிற்கு வெளியே உள்ள இணைய இணைப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே ஸ்டார்லிங்க்கை இலங்கைக்கு கொண்டு வருவதன் நோக்கம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இது தொடர்பான பூர்வாங்க வேலைகள் முடிந்த நிலையில், ஸ்டார்லிங்க் வலையமைப்பு தொடர்பில் இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு மதிப்பிடுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TW

Related posts

கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

editor

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட 6 பேர் பலி!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81,220 பேர் கைது