மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகமாக கே.பி.என் தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இன்று (30) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மேலதிக ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது மேலதிக ஆணையாளர் நாயகமாக தாரக நிரோஷன் தேவப்பிரிய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான தாரக நிரோஷன் தேவப்பிரிய, 2003 நிர்வாக சேவை குழுவின் உறுப்பினர் ஆவார்.
ஆரச்சிகட்டுவ பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக அரச சேவையில் இணைந்த அவர், தனது அரச சேவைக் காலத்தில் நிதி அமைச்சு, சுங்கத் திணைக்களம் போன்ற பல அரச நிறுவனங்களில் பணியாற்றியதுடன், இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் கல்வி அமைச்சில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றினார்.

