உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

கலன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் கெகிராவ, கலன்பிந்துனுவெவ வீதியில் யகல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று (05) 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 29 வயதான டபிள்யூ.எம். ஜனக சம்பத் மற்றும் 19 வயதான ஹேஷான் இசாரா ஆகியோரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலன்பிந்துனுவெவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஹுருலுவெவ வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வளைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கொன்கிரீட் தடுப்புக் கேட்டில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்ததோடு, காயமடைந்த 2 இளைஞர்களையும் ஹுருலுவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளூர்வாசிகள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது 2 இளைஞர்களும் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் யக்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனை இன்று (06) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

அடுத்தவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவப் பண்பு எமது அரசியல் தலைவர்களிடம் இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் – யாழில் சம்பவம்

editor