வகைப்படுத்தப்படாத

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|KURUNEGALA)-குளியாப்பிட்டிய, நிந்தவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும், மற்றொருவரும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

49 மற்றும் 53 வயதுடைய இரண்டு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குளியாப்பிட்டிய பொலிஸார் லெதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Premier calls for Ranjan’s explanation

இன்று இலங்கை வரும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்

Double-murder convict hacked to death in Hambantota