உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதி விபத்து – 21 வயதுடைய இளைஞன் பலி

கம்பஹா மாவட்டம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யக்கல – கிரிந்திவெல வீதியில் வாரபலான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

கிரிந்திவெலவிலிருந்து யக்கல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.

இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 646 கைது

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது