உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள், காரில் மோதி விபத்து – வீதியில் தூக்கி வீசப்பட்ட மூன்றரை வயது மகள் பலி

சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தம்புள்ளை, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே என்ற சிறுமி ஆவார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர், அவரது மகளை முன் இருக்கையில் வைத்துக்கொண்டு பயணித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒரு காரின் பின்புறத்தில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளின் முன் இருக்கையில் இருந்த மகள் வீதியில் தூக்கி வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்துக்குள்ளான காரும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.

மகளின் தாய் சிகிரியா பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிவதாகவும், அவரை வேலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

அவர் தனது மகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் சென்ற கார் திடீரென பிரதான வீதியில் நின்றதாகவும், மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதியதாகவும் உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆட்சிக்கு வந்த பின் நீதியை நிலைநாட்டுவோம் என்க வெட்கமில்லையா – கடுமையாக சாடிய ஹரீன்

திங்கள் முதல் 6 – 9 வரையிலான தரங்கள் ஆரம்பிக்கப்படும்

துப்பாக்கி சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் – வியாழேந்திரனின் சாரதி விளக்கமறியலில்

editor