உள்நாடு

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 10 மோட்டார் சைக்கிள்களும் 3 முச்சக்கர வண்டிகளும் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

Related posts

Update – கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

editor

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு