உலகம்

மோடியின் பாதுகாப்புக்கு பங்களாதேஷ் அரசு உறுதி

(UTV |  டாக்கா) – நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக எதிர்வரும் 26ம் திகதி பங்களாதேஷ் செல்கிறார்.

பங்களாதேஷின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நாள் மற்றும் நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்கள் அங்கு கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த 17ம் திகதி தொடங்கிய இந்த விழா வருகிற 27ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.‌

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என பங்களாதேஷ் அரசு உறுதியளித்துள்ளது.

அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஏகே அப்துல் மோமன் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையில்;

“..பிரதமர் மோடியை பங்களாதேஷுக்கு அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அவரின் பயணத்துக்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை. சில இடதுசாரி மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் அவரது வருகையை எதிர்க்கின்றன. அவர்கள் அதை செய்யட்டும். அவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. மோடி உட்பட விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து வெளிநாட்டு விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன..” எனத் தெரிவித்திருந்தார்.

 

Related posts

21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் இந்தியாவுக்கு

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

editor

கணவனின் தந்தையை திருமணம் செய்த பெண்