வகைப்படுத்தப்படாத

மோடிக்கு அடுத்த வருடம் கடுமையான வருடமாக இருக்கும்?

(UTV|INDIA)-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த வருடம் கடுமையான வருடமாக இருக்குமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 5 சட்டமன்றங்களுக்கு நடாத்தப்பட்ட தேர்தலில் 3 இல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்தியபிரதேஷ் சட்டமன்ற தேர்தலில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று அதிகாலை 2.30 மணியளவில் அறிவித்துள்ளது.

அத்துடன், தமக்கு ஆட்சியமைப்பதற்கான தௌிவான பெரும்பான்மை உள்ளதெனவும் தம்மை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் கோரி அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் 3 தலைவர்கள் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

ஆட்சியமைக்க 116 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில் 111 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதுடன், மேலும் 3 தொகுதிகளில் முன்னிலையிலுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரதீய ஜனதாக் கட்சி 103 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், தம்மையே ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டுமெனக் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Premier to testify before PSC on Aug. 06

Navy arrests a person with ‘Ice’

பாம்புகள் மற்றும் எலிகளை உண்ணும் 25 வயது இளைஞர்..!