உள்நாடு

‘மொட்டில் உள்ள பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு..’

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும், ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான வலதுசாரிக் குழு என்றும், மற்றையது ஜனதா விமுக்தி பெரமுன, உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகிய இடதுசாரிக் குழு என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எனவும், அதன் பின்னர் சஜித் பிரேமதாச தனித்து விடப்படுவார் அல்லது யதார்த்தத்தை எதிர்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் – வைத்தியர் அருச்சுனா

editor

அரச ஊழியர்களின் பணிநேரம் குறித்து வௌியான சுற்றறிக்கை!

கட்டுநாயக்க பதற்ற சம்பவ நபருக்கு எதிரான தீர்மானம்!