உள்நாடு

மைத்திரி – ரணில் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரும் குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“The Y Personality of the Year 2025” விருதினால் கௌரவிக்கப்பட்டார் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

வீடியோ | சம்மாந்துறை பிரதேச சபை அமர்வில் அமளி துமளி – ஊடகவியலாளரை வெளியேற்றிய தவிசாளர்

editor

21 வது கொரோனா மரணம் பதிவானது