சூடான செய்திகள் 1

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-மாகாண சபை தேர்தலை ஜூன் மாதத்திற்கு முன்னர் நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்கப்பட்டுள்ள குறித்த யோசனை எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது குறித்த கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றுள்ளது.

 

 

 

 

 

Related posts

சவால்களைக் கண்டு ஓடி ஒளிபவர்கள் நாமில்லை…

நிகாப் மற்றும் புர்கா பயன்படுத்த முடியுமா? முடியாதா?

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு – யாழ்ப்பாணம் வரை புகையிர சேவை…