உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நேற்று(08) கல்வியமைச்சர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.

மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் திருநாள் இன்று

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்