சூடான செய்திகள் 1

மேல் மாகாண தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்

(UTVNEWS | COLOMBO ) – தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா மா அதிபராக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

பதில் காவற்துறைமா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓக்டோபர் 11ம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபாயவை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை