உள்நாடு

மேல் மாகாணத்தில் 2,558 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உரிய முறையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய 2,558 நபர்களுக்கு பொலிஸார் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கை நேற்றைய தினமும் மேல் மாகாணத்தினால் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து பொலிஸ் துறையின் 829 அதிகாரிகள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது 6,135 மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் சோதனை செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 9,678 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக சேவைகள் ஆரம்பம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு : ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

இன்று இரவு இயக்கப்படவிருந்த தபால் ரயில் சேவைகள் இரத்து

editor