உள்நாடு

மேல் மாகாணத்தில் எகிறும் கொரோனா

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 692 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 223 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன், கம்பஹா மாவட்டத்தில்119 பேரும், களுத்துறையில் 112 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,715 ஆகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் – மனிதாபிமான ரீதியாக கூறுகிறேன் – ரணில் விக்ரமசிங்க

editor

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor