உள்நாடு

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பயணத்தடையை மீறுவோரை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியுள்ள நபர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளைய தினம் மின்வெட்டு இல்லை

editor

இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு

editor