உள்நாடு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் நேரங்களில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே வெள்ளிக்கிழமை (17) குறித்த வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக, கொத்மலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தொடர்ந்து மழையுடனான வானிலை தீவிரமாகும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளையும் திறப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்படும் நிலையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, காசல்ரீ நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

காலியில் பலத்த மழை – பல வீதிகள் நீரில் மூழ்கியது

editor

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்