உள்நாடு

மேல்மாகாணத்தில் 404 பேர் கைது

(UTV|கொழும்பு) – நேற்று(16) மாலை 6 மணி முதல் இன்று(17) அதிகாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 404 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைபொருளுடன் 170 பேர் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது 143 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதை பொருளுடன் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஐஸ் ரக போதை பொருளை கைவசம் வைத்திருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

editor

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!