உள்நாடு

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) –  கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறியவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் பயணித்துள்ள பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகத்திற்கு அறியத்தருமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை

“2023 வலிமிகுந்ததாக இருக்கும்” : IMF

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு