உள்நாடு

மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, இந்தத் தடுப்பூசி தொகுதி நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக இன்று (25) அதிகாலை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தடுப்பூசி தொகுதி தற்போது இலங்கை மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளைய தினம் மின்வெட்டு இல்லை

editor

சுனாமியின் நினைவலைகள் …

ஆர்ப்பாட்டம் காரணமாக முடங்கியது போக்குவரத்து