உள்நாடு

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டை வந்தடைந்த 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளில், குருணாகல் மாவட்டத்துக்கு 4 இலட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்துக்கு 275,000 தடுப்பூசிகளும், மாத்தறை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 இலட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

அவ்வாறே, குறித்த சைனோபாம் தடுப்பூசிகளில் புத்தளம், பொலனறுவை, நுவரெலியா, மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு 125, 000 தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Related posts

பொதுமன்னிப்பு காலத்திற்குள் 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைவு

நாடாளுமன்றத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் : சிக்கிய மேலும் சிலர்

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் – வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor