மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் நேற்று (27) இரவு 11.30 மணிக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, அந்தப் பகுதிகளில் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பேணப்படும் நீர் அளவீட்டு நிலையங்களின் பெறுமதிகளைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும்.
எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிப்பவர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை அடைவது மிகவும் உகந்தது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
