உள்நாடு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – மேலும் 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று(22) காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் நெதர்லாந்தில் இருந்து துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 648 என்ற விமானத்தில் அவை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்

எண்ணெய் விலை சரிந்தது