உள்நாடு

மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இதுவரையில் 13.98 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

    

Related posts

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

மன்னார் வைத்தியசாலையில் தாய், சேய் மரணங்கள் – சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் M.P அவசர கடிதம்

editor

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்த – அர்ஜுன ரணதுங்க.