உள்நாடு

மேலும் ஒரு தொகுதியினர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு [PHOTOS]

(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது வீடுகளை நோக்கி பயணிக்க முடியாது நிர்க்கதியான மிரிஹான பொலிஸ் பிரிவின் நுகேகொடை பகுதியில் தங்கியுள்ளவர்களை வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று காலை நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு  மிரிஹான பொலிஸ் மைதானத்தில் நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனைகளை அடுத்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நோய்களில், சிறார்கள் உள்ளிட்ட 500ற்கும் அதிகமானோரை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

மேலும் 485 பேர் குணமடைவு

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு