விளையாட்டு

மேலும் இரு வீரர்களுக்கு கொவிட் தொற்று

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் 02 வீரர்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெஃப்ரி வான்டர்சே ஆகியோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை ஆரம்பமாகும் 02வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் நாளைய தினம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் விளையாட முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்த வருட அனைத்துப் போட்டிகளும் இரத்து

இலங்கை – இந்தியா மீது சர்வதேச ஊடகங்களது அவதானம்

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!