உள்நாடு

மேற்கு கொள்கலன் முனைய ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய (WCT) ஒப்பந்தத்தில் தமக்கு 51% பங்கு கிடைக்கவுள்ளதாக இந்தியாவின் அதானி துறைமுகங்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகங்கள் மற்றும் தளவாட நிறுவனமான அதானி குழுமம் இது தொடர்பில் இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதத்தை (LOI) தாம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம், பொது-தனியார் கூட்டாண்மை என 35 வருட காலத்திற்கு நிர்மாணம், செயல்பாடு மற்றும் பரிமாற்ற அடிப்படையில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம், 1400 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் ஆழத்துடன் அபிவிருத்தி செய்யப்படும்.

இதன் மூலம் மேற்கு கொள்கலன் முனையத்தின், கொள்கலன்களை கையாளும் திறன் உயர்த்தப்படுவதுடன், உலகளாவிய போக்குவரத்து பாதையில் உலகின் சிறந்த மூலோபாய முனைகளில் ஒன்றான இலங்கையின் இருப்பிட நன்மையை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கும் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

editor

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP எம்.பி யின் வாகனம்

editor

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு